போதை இல்லா தமிழ்நாடு உருவாக வேண்டும்- தமிழாசிரியர் பொன்னம்மாள்

மன்னார்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியில் ஆயிரம் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது அப்பள்ளியின் தமிழாசிரியர் கூறுகையில் போதையில்லாத, புனிதமான தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று கூறினார்.  திருவாரூர் மாவட்டம்…

மன்னார்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியில் ஆயிரம் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது அப்பள்ளியின் தமிழாசிரியர் கூறுகையில் போதையில்லாத, புனிதமான தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று கூறினார். 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம்,மன்னார்குடி ரோட்டரி கிளப் சார்பில் ‘வேண்டாம் போதை’ விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள (FINDLAY) பின்லே மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.  இதன் டிஜிட்டல் பார்ட்னராக daily hunt இணைந்துள்ளது.

மன்னார்குடி ரோட்டரி சங்க தலைவி மீனாட்சி சூரிய பிரகாஷ் தலைமையில் (FINDLAY)
பின்லே பள்ளி மாணவ மாணவிகள் 1000 பேர் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி
எடுத்துக்கொண்டனர்.

பின்னர் பேட்டியளித்த அப்பள்ளியின் தமிழாசிரியர் முனைவர் பொன்னம்மாள் பேசுகையில், மாணவர்களும் அவர்களை சுற்றி இருப்பவர்களும் போதை பொருட்களை பயன்படுத்த கூடாது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஒருகோடி மாணவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கில் செயல்படுகிறது. மன்னார்குடி பின்லே பள்ளியில் விதைத்துள்ள வேண்டாம் போதை விழிப்புணர்வு இயக்கம் மன்னார்குடி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் பொதுமக்களிடம் பரவி நியூஸ் 7 தொலைக்காட்சியின் எண்ணம் நிறைவேறவும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.புனிதமான தமிழ்நாடு, போதை இல்லா தமிழ்நாடு,
உருவாக வேண்டுமென வாழ்த்தினார்.

இதைப்போல் பேட்டியளித்த 12 ஆம் வகுப்பு மாணவன் தணிகைகுமரன் பேசுகையில், பின்லே பள்ளியில் ஆயிரம் மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டதால் மாணவர்களாகிய நாங்களும் எதிர்கால தலைமுறையினரும் போதை தடுப்பை பின்பற்றுவோம். எந்த ஒருதலைமுறையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் போதை பொருட்களை உட்கொள்ளாமல்  இருக்க நாங்கள் பாடுபடுவோம் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.