இளைய தளபதியாக உருவெடுக்கும் சிவகார்த்திகேயன்!

‘அவரு பிடிச்சுட்டாருங்கங்க.. குழந்தைங்களலாம் பிடிச்சிட்டாரு!’ என்று சில வருடங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் குறித்து விஜய் ஒரு மேடையில் பேசியிருந்தார். ஆனால் குழந்தைங்கள் மட்டுமில்லாமல் இன்றைக்கு மொத்த குடும்பத்தையுமே பிடித்துவிட்டார் சிவகார்த்திகேயன் என்று தான் சொல்ல…

‘அவரு பிடிச்சுட்டாருங்கங்க.. குழந்தைங்களலாம் பிடிச்சிட்டாரு!’ என்று சில வருடங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் குறித்து விஜய் ஒரு மேடையில் பேசியிருந்தார். ஆனால் குழந்தைங்கள் மட்டுமில்லாமல் இன்றைக்கு மொத்த குடும்பத்தையுமே பிடித்துவிட்டார் சிவகார்த்திகேயன் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட்டத்தில் ஒரு பங்கேற்பாளராக தொடங்கி, தொகுப்பாளர், நட்சத்திர தொகுப்பாளர், நகைச்சுவை நடிகர், நட்சத்திர நடிகர் என்ற சிவாவின் படிப்படியான வளர்ச்சியில் 15 ஆண்டுகால கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, அவமானம் என பல உள்ளடங்கியுள்ளது. சினிமாவில் நடிகராக சாதிக்க வேண்டும் என கிளம்பும் பலருக்கும் சிவ கார்த்திகேயன் ஒரு இன்ஸ்பிரேஷனாக உள்ளார்.

ஒரு காமெடி எண்டெர்டெயினர் எனும் இடத்தில் இருந்து ரஜினி, விஜய் போல மாஸ் எண்டர்டெயினராக உருவெடுக்கும் சில முயற்சிகளில் சிவாவுக்கு சிறிய சறுக்கல் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் சற்றும் மனம் தளராமல் நம்ம வீட்டு பிள்ளை, டான், டாக்டர் என காமெடியுடன் செண்டிமெண்ட் மாஸ் என கலந்து கொஞ்சம் கொஞ்சமாக அதை சரிகட்டினார். இந்நிலையில் யோகி பாபுவை வைத்து ‘மண்டேலா’ எனும் வெற்றிப்படத்தைக்கொடுத்த இயக்குநர் அஸ்வினுடன் இணைந்து சிவகார்த்திகேயன் எடுக்கும் அடுத்த அவதாரம் தான் ‘ மாவீரன்’.

முன்பெல்லாம் படங்களின் promotionகளுக்காக போஸ்டர்கள் தொடங்கி, ட்ரெய்லர், டீஸர், First look, on board (படத்துக்கு நடிகர்கள் தேர்வு பற்றிய அறிவிப்பு) என பல்வேறு சாகசங்களை நிகழ்த்திவந்த தமிழ் சினிமா தற்போது புதிதாக கையில் எடுத்திருக்கும் உத்திதான் Announcement வீடியோ.இதற்கு முன்பான Announcement வீடியோக்கள் எல்லாம் கொஞ்சம் formalஆக இருந்துவர டாக்டர் படத்திற்கான update வீடியோவை அப்படித்தின் இயக்குநர் நெல்சனும், நடிகர் சிவகார்த்திகேயனும் ஒரு drama போல் எடுத்து வெளியிட்டிருந்தார்கள். எந்தவித அனிமேஷன்களும், கிராபிக்ஸ்களும் இல்லாமல் ஒரு ரூமில் ரகளையாக அவர்கள் எடுத்து வெளியிட்ட அந்த update வீடியோ இணையத்தில் வைரலானது. அதனை தொடர்ந்து பாடல் வெளியீட்டு அறிவிப்பு பட வெளியீட்டு அறிவிப்பு என எல்லாவற்றிக்கும் அதேபோலான announcement வீடியோக்களை எடுத்து வெளியிட்ட promotionகள் அனைத்தும் பக்காவாக க்ளிக் ஆனது.

இதனைத்தொடர்ந்து விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கான promotion-ம் அதே பாணியில் வெளியிடப்பட்டது. voice over-ல் மட்டும் தளபதி விஜய் கெஸ்ட் ரோல் செய்த அந்த வீடியோ இணையத்தின் சென்சேஷனாக மாறி புது ட்ரெண்டையே உருக்கியது.இந்நிலையில் அஸ்வினுடன் சிவா கைகோர்க்கும் இப்படத்திற்கு மாவீரன் என்று தலைப்பிடப்பட்டு அதன் announcement வீடியோ வெளியிட்டுள்ளது படக்குழு.

ஹாலிவுட்டின் dark night படம் போலான ஒரு விஷுவல் தீமில் சிவகார்த்திகேயனை போட்டு சிலர் புறட்டி எடுக்கின்றனர். மேலிருந்து கீழே இறங்கி கயிறுகள் அடிவாங்கி மயங்கிக்கிடக்கும் அவரின் கை கால்களில் முடிச்சுப்போட்டு தூக்கிவிடுகிறது. பொம்மலாட்டம் போல் அந்த கயிறின் மறுமுனையைக்கொண்டு யாரோ சிவகார்த்திகேயனை இயக்க அவர் அனைவரையும் அடித்து துவம்சம் செய்வது போல் அமைந்துள்ளது இந்த வீடியோ. தளபதி படத்தில் வரும் ரஜினி போலான ஹேர் ஸ்டைலுடன் வரும் சிவாவின் தோற்றம் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே ‘ஹீரோ’ எனப்படும் சூப்பர் ஹீரோ படத்தில் நடித்து தோல்வியடைந்துள்ள நிலையில் இதுலும் சூப்பர் ஹீரோ போலான மேஜிக்கல் காட்சிகள் இடம்பெற்றிருப்பதை பார்த்து இது சூப்பர் ஹீரோ படமா ,ஆக்‌ஷன் படமா.. அல்லது இரண்டும் கலந்த சூப்பர் ஆக்‌ஷன் சூப்பர் ஹீரோ படமா என்ற கேள்விகளுடன் இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர். இன்னொரு விக்ரம் Announcement வீடியோ போல இது ஒரு title announcement-காக எடுக்கப்பட்ட பிரத்யேக வீடியோதான் எனவும் படத்தில் இந்த காட்சிகள் இடம்பெறாது எனவும் சினிமா ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்த காட்சிகளின் முடிவில் வார இதழ்களில் வரும் வரைபடங்களுடன் கூடிய காமிக்ஸ் கதை போலான படங்கள் இருப்பதை பார்க்கும் போது நிச்சயம் இது ஒரு வித்தியாசமான முயற்சியாக இருக்கும் என்று கணிக்கின்றனர் சினிமா வல்லுநர்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.