முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

உயிரோடு இருக்கும் கணவருக்கு இறப்பு சான்றிதழ் வாங்கிய விவாகரத்து பெற்ற மனைவி

உயிருடன் இருக்கும்போதே கணவர் இறந்ததாக கூறி இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் பெற்ற மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரி கணவர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

காரைக்குடி அருகே உள்ள சந்திரசேகர் மற்றும் நதியாஸ்ரீ என்ற பெண்ணிற்கும் கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்தும் பெற்றுள்ளனர். பிறகு, வழக்கு சம்பந்தமாக சென்னைக்கு அடிக்கடி அழைந்துவந்ததால் சந்திரசேகரும் அவரது தந்தையும் நடத்திவந்த மளிகைக்கடையை சரிவர கவனிக்க முடியாததால் பணத்தேவை ஏற்படவே சந்திரசேகர் பெயரில் இருந்த ரூ45 லட்சம் மதிப்பிலான இடத்தை விற்க முயன்றுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதே சமயம், அந்த இடத்தை மனைவி நதியாஸ்ரீ , சந்திரசேகர் இறந்ததாக இறப்பு சான்றிதழ் பெற்றும், வாரிசு சான்றிதழ் பெற்றும், 40 லட்சம் மதிப்பிலான இடத்தை விற்று மோசடி செய்ததாகவும் தகவல் தெரியவே அதிர்ச்சியடைந்த சந்திரசேகர் இது குறித்து சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் வந்த சந்திரசேகர் உயிருடன் இருக்கும்போதே இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் பெற்று மோசடியில் ஈடுபட்ட மனைவி மீதும் முறையாக விசாரிக்காமல் சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம் மனு அளித்தார். உயிருடன் இருக்கும்போதே கணவர் இறந்ததாக சான்றிதழ் பெற்று மனைவி மோசடியில் ஈடுபட்டதும் விசாரிக்காமல் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

போலியோ திட்டத்தை போல தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் : மணீஷ் சிசோடியா

Jeba Arul Robinson

சாலை தடுப்பில் கார் மோதியதில் மூவர் உயிரிழப்பு

நெல் பயிரிடாதீங்க ; முதல்வர் வேண்டுகோள்

Halley Karthik