முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

இறந்துகிடந்த தாய் கழுதை; கண்ணீர் விட்டு அழுத குட்டி

ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் இறந்த தாய் கழுதை சடலத்தின் முன்பு கழுதைக் குட்டி கண்ணீர் விட்டு அழுத சம்பவம் காண்போரை கலங்கச் செய்தது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் இன்று விடியற்காலையில் பெண் கழுதை ஒன்று இறந்துள்ளது. இறந்த அந்த தாய் கழுதையின் சடலத்தின் முன்பு குட்டி கழுதை கண்ணீர் மல்க அழுது கொண்டிருந்துள்ளது. விடியற்காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை தாய் கழுதையை விட்டு நகராமல் கண்ணீர் சிந்தி கொண்டே குட்டி கழுதை அங்கேயே நின்றிருந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதிலும், தொடர் மழை பெய்து கொண்டிருந்த போதிலும் இறந்த தாயின் சடலத்தை விட்டு நகராமல் அருகிலேயே நின்று குட்டி சடலத்தை காத்துக் கொண்டிருந்தது. இந்தச் சம்பவம் ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் காண்போரின் கண்களை கலங்கச் செய்தன.

இறந்தவர்களின் சடலத்தை காக்கும் பணி மனித குலத்துக்கு மட்டும் தான் தெரியுமா? நாங்கள் என்ன விதிவிலக்கா என்ற கோணத்தில் இறந்த தாய் கழுதை சவத்தை காத்துக் கொண்டிருந்த பிள்ளை கழுதையின் பாசப் போராட்டம் சம்பவம் ஆரணியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் நாங்கள் டபுள் டாக்டர்ரேட்” – செல்லூர் ராஜூ

Halley Karthik

அமெரிக்காவில் மேலும் ஒரு தமிழக பழங்கால சிலை இருப்பது கண்டுபிடிப்பு

Dinesh A

ஆஸி.சுழல் லியான் அசத்தல் சாதனை: எலைட் லிஸ்டில் இணைந்தார்

EZHILARASAN D