சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் முதல் பாடல் வெளியீடு

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்தின் பிம்பிலிக்கி பிளாப்பி என தொடங்கும் முதல் பாடல் வெளியாகியுள்ளது.   சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு…

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்தின் பிம்பிலிக்கி பிளாப்பி என தொடங்கும் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

 

சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடித்துள்ளார். படம் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகி வருகிறது.

 

இவர்களுடன் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரேம்ஜி இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

இந்நிலையில், பிரின்ஸ் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. பிம்பிலிக்கி பிளாப்பி என தொடங்கும் முதல் பாடலை படத்தின் கதாநாயகன் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமன் இசையமைத்துள்ள இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

மேலும் படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.