தென்மாவட்டங்களில் சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலைகள் அமைத்து, வேலை வாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
தூத்துக்குடி போராட்டத்தின்போது உயிரிழந்த செல்வசேகர் என்பவரின் சகோதரிக்கு தகுதிக்கேற்ற வேலை வழங்குவதற்கான பணியாணையை, மக்களவை உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென் மாவட்டங்களில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத, மக்களை பாதிக்காத தொழிற்சாலைகள் நிச்சயம் கொண்டு வரப்படும் என உறுதி கூறினார்.







