அரக்கோணம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மின்சாரம் திருட்டு!

ராணிப்பேட்டை மாவட்டம் , அரக்கோணம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மின்சாரம் திருடப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் , அரக்கோணம் அடுத்த இச்சிபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஐயன்தாங்கள் காலனிக்கு அரசு…

ராணிப்பேட்டை மாவட்டம் , அரக்கோணம் அரசு நேரடி நெல் கொள்முதல்
நிலையத்தில் மின்சாரம் திருடப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் , அரக்கோணம் அடுத்த இச்சிபுத்தூர் ஊராட்சிக்கு
உட்பட்ட ஐயன்தாங்கள் காலனிக்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்
ஒதுக்கப்பட்டது. ஆனால், முறைகேடாக இச்சிபுத்தூர் செக்போஸ்ட் அருகே கட்டி
முடிக்கப்படாத அரசு சமுதாயக் கூடத்தில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மேலும், முறைகேடாக திறக்கப்பட்டுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல்
நிலையத்திற்கு மின்சாரம் திருடபடுகிறது.

மேலும், இந்த சம்பவம் அப்பகுதி இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருகாமையில் உள்ள மின்கம்பம் மூலம் மின் இணைப்பு பெறாமலேயே ,
அங்கிருந்து மின்சார திருடப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும், விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு 120 சட்ட விரோதமாக வசூல் செய்ய படுவதாகவும் கூறப்படுகிறது.

—-கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.