திடீரென தீ பிடித்து எரிந்த கார் : அதிஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்

வேலூர் நீதிமன்றம் எதிரே திடீரென தீ பிடித்து எரிந்த கார், அதிஷ்ட வசமாக உயிர் தப்பிய ஓட்டுனர் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ், இவர் ஒரு வழக்கு தொடர்பாகத் தனது வழக்கறிஞரைச்…

வேலூர் நீதிமன்றம் எதிரே திடீரென தீ பிடித்து எரிந்த கார், அதிஷ்ட வசமாக உயிர்
தப்பிய ஓட்டுனர்

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ், இவர் ஒரு வழக்கு தொடர்பாகத் தனது வழக்கறிஞரைச் சந்திக்க இன்று வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் நீதிமன்றத்துக்கு வந்துள்ளார். பிறகு  அவர் வந்த காரை  வெளியே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். மீண்டும் திரும்ப வந்து வாகனத்தை எடுக்க முயன்ற போது திடீரென வாகனத்திலிருந்து புகை வந்ததுடன், தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. காருக்கு உள்ளே மாட்டிக்கொண்ட சதீஷ் என்பவரை அங்குள்ளப்பொதுமக்கள்  கார் கண்ணாடியை உடைத்து மீட்டுள்ளனர். இதில் படுகாயம் ஏதுவுமின்றி சதீஷ் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவல் அறிந்து விரைந்து வந்த வேலூர் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் இது தொடர்பாக சத்துவாச்சாரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத் தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த காரை சதீஷ் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு Second hand ல் வாங்கியுள்ளதாகத் தெரிவித்தார். கார் தீ பற்றி எரிந்தது மட்டுமின்றி எதிர்பாராத விதமாக அருகே இருந்த மிதிவண்டி ஒன்றும் எரிந்து நாசமானது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.