எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மொத்தம் 300 படுக்கைகள் காய்ச்சல் வார்டில் உள்ளன.
அது முழுவதும் நிரம்பியதால் கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டு அங்கு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஃப்ளு காய்ச்சல் அதிகமாக இருப்பதால் காய்ச்சல் வார்டுகள் நிரம்பியதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
தற்பொழுது மழைக் காலம் துவங்க உள்ள நிலையில் மீண்டும் ஃப்ளு காய்ச்சல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றோம் என்று எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முதல்வர் எழிலரசி தெரிவித்தார்.
காலநிலை மாறுபாடினால் எப்பொழுதும் வரும் காய்ச்சல்தான். பயப்படுவதற்கு எதுவும் இல்லை என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கின்றனர்.
ப்ளூ காய்ச்சல் இயல்பாக வருவது தான். ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்று கூறுவது தவறான தகவல் என்று தொலைபேசி மூலம் ICH மருத்துவமனை முதல்வர் எழிலரசி தெரிவித்தார்.








