இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகளுக்கு மேலாக ராணியாக இருந்து வந்தவர். தனது பதவி கால வரலாற்றில் 15 பிரதமர்களை நியமித்தவர். இங்கிலாந்திற்கு மட்டுமின்றி 14 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி அரசியாகவும் இருந்தவர். 1961, 1983, 1997 என 3 முறை இந்தியா வந்தவர். இந்நிலையில், 96 வயதான இவர் செப்டம்பர் 8ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
எலிசபெத்தின் மறைவுக்கு பிறகு அவரது மகன் சார்லஸ் செப்டம்பர் 10ம் தேதி இங்கிலாந்தின் அரசராக பதவியேற்றார். அவரது மனைவி கமீலா புதிய ராணியாக பதவியேற்றார். குழந்தை பருவம் முதல் அரண்மனையில் வளர்ந்தாலும், பள்ளிக்குச் சென்று படித்தவர் சார்லஸ். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரிக்கு சென்று வரலாற்றுப் பாடத்தில் 1970ம் ஆண்டில் பட்டம் பெற்றார். பல்கலைக்கழகத்துக்குச் சென்று பட்டம் பெற்ற அரசு குடும்பத்தைச் சேர்ந்த முதல் நபர் சார்லஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி படிப்பில் சிறந்து விளங்கிய சார்லஸ் ஆரோக்கியம், சுத்தம் உள்ளிட்டவற்றை முறையாக கடைபிடிப்பவர் என அரண்மனையில் வேலை செய்த பணியாளர்கள் கூறுகிறார்கள். சார்லஸ் எங்கு சென்றாலும், கழிவறை இருக்கை மற்றும் கழிவறை சென்ற பின் பயன்படுத்தும் காகிதம் உள்ளிட்டவற்றை தன்னுடன் எடுத்துச் செல்வார் என நியூயார்கில் உள்ள செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.
மேலும், சார்லஸ்க்கு நாள்தோறும் காலை நேரத்தில் தன்னுடைய பைஜாமாவையும், ஷூ லேஸ்களை அயன் செய்திருக்க வேண்டுமாம். பாத் ப்ளக் உள்ளிட்டவை குறிப்பிட்ட இடத்தில் இருக்க வேண்டுமாம். இவ்வாறு அந்த செய்தித்தாளில் குறிப்பிட்டிருந்தது.
சார்லஸுக்கு ஆரோக்கியமாக சாப்பாடுவதில் மிக விருப்பம். அதன்படி ப்ரட், ஜூஸ் என வீட்டில் செய்த ஆரோக்கியமான உணவுகளை மட்டும் பருகக் கூடியவர் சார்லஸ் என அரண்மனையில் வேலை செய்த பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
-சுஷ்மா சுரேஷ்.








