உளுந்தூர்பேட்டை அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது , காரில் குடும்பத்துடன்  கோயிலுக்குச் சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி இவர் தனது…

உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது , காரில் குடும்பத்துடன்  கோயிலுக்குச் சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி இவர் தனது
குடும்பத்துடன் திருநள்ளாறில் உள்ள ஒரு கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். அப்பொழுது
அந்த கார் உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் கிராமம் வந்தபோது காரின் முன்
பகுதியில் புகை வந்துள்ளது. இதனைக் கண்ட ஓட்டுநர் உடனே  காரை நிறுத்தி விட்டு
காரின் முன் பகுதியில் பார்த்த பொழுது அதிகளவு புகை வருவதைக் கண்டு காரில் பயணித்தவர்கள்  உடனடியாக வெளியேறினர். அவர்கள் வெளியே சென்ற சிறிது நேரத்திலேயே கார் தீ பிடிக்கத் தொடங்கியது. தீ மள மள வென கார் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது  இதனை  அறிந்து  திருநாவலூர் தீயணைப்பு துறை வீரர்கள்  30 நிமிடங்களுக்கு மேலாகப் போராடி தீயை அணைத்தனர். இந்த காரில் பயணம் செய்த அனைவரும் சிறு காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் . இந்த விபத்தினால் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு.  பின்பு விபத்தில் சிக்கிக் கொண்ட வாகனத்தை அப்புறப்படுத்தப்பட்டு  பின்பு போக்குவரத்து சரி செய்யப்பட்டது . தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.