கோவையடுத்த அன்னூர் வழியாக சென்ற தனியார் பேருந்தில் திடீரென்று வெளியேறிய கரும்புகையை கண்டு பயணிகள் அச்சத்தில் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது.
கோவையில் இருந்து சத்தியமங்கலத்திற்கு சென்ற தனியார் பேருந்து, அன்னூர் அருகே சென்று கொண்டிருந்த போது, இன்ஜின் பகுதியில் கரும்புகை வெளியேறியது. அதிகளவில் கரும்புகை வெளியேறியதால், அச்சமடைந்த பயணிகள் பேருந்திலிருந்து கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். நல்வாய்ப்பாக பேருந்தில் தீ விபத்து ஏற்படாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இஞ்ஜின் பகுதி இருந்து ரேடியேட்டரில் தண்ணீர் அல்லது கூலன்ட்
ஆயில் குறைந்தால், வெப்பமடைந்து அதிகளவில் புகை வெளியேற வாய்ப்பு உள்ளதாக பழுது நீக்கும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா







