வனப்பகுதியில் தூங்கி கொண்டிருக்கும் யானைக்குட்டிக்கு, வனத்துறையினர் நிழலுக்காக குடைபிடித்து நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீப காலமாக யானையின் செல்ல குறும்புகள் குறித்த வீடியோக்கள் அதிகம் வெளியாகி வருகின்றன. அண்மையில் குட்டியானை ஒன்று தன் தாயுடன் குளத்தில் துள்ளிகுதித்து விளையாடிய காட்சிகளை பார்த்து ரசித்தோம். பின்னர், ஒரு ஆண்யானை குட்டி, அதன் தாயிடமிருந்து பிரிந்து மாணவர்கள் படிக்கும் பள்ளிக்குள் சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது. வேறொரு பகுதியில் பள்ளத்தில் இறங்கும் போது, குட்டியானை குட்டிக்கரணம் அடித்த வீடியோவும் அனைவரையும் கவர்ந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு வனத்துறையினர் யானை குட்டி ஒன்றை தனது தாயுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த குட்டி யானை வழியிலேயே அயர்ந்து தூங்கிவிட்டது. உடனே அதனுடன் சென்ற தமிழ்நாடு வனத்துறையினர் அது தூங்கும் அழகை கண்டு அதற்கு நிழலுக்காக குடை பிடித்து நின்றனர். அவர்களின் கருணை மற்றும் அக்கறை பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
https://twitter.com/supriyasahuias/status/1567368771047948288?s=20&t=CJRu0C9oUECp9DSN7ZuVZw
நெகிழ்ச்சியூட்டும் இந்த வீடியோவை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கூடுதல் முதன்மை செயலாளரான சுப்ரியா சாகு தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோவானது சமூக வலைதளப்பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.







