முடிவெட்டிவிட்டு காசு கொடுக்காத நபர்; கழுத்தை அறுத்துக் கொன்ற சலூன் கடை உரிமையாளர்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே முடிதிருத்தம் செய்து கொண்டு காசு கொடுக்காததால் கழுத்தை அறுத்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். காட்பாடி அடுத்த அக்ஸிலியம் கல்லூரி ரவுண்டானா அருகே உள்ள தனியார்…

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே முடிதிருத்தம் செய்து கொண்டு காசு கொடுக்காததால் கழுத்தை அறுத்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

காட்பாடி அடுத்த அக்ஸிலியம் கல்லூரி ரவுண்டானா அருகே உள்ள தனியார் வணிக கட்டடத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அபனி சரணியா என்பவர் கழுத்தில் வெட்டுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வேலூர் விருதம்பட்டு காவல் துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். எனினும், மருத்துவமனையில் அபனி சரணியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பார்த்தபோது அபனி சரணியா என்பனர் வெட்டப்பட்ட அன்று மாலை 4 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து வெளியில் நடந்துவருவது தெரிந்தது. தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கடைசியாக வேலூர் ஆக்ஸிலிம் கல்லூரி ரவுண்டணா அருகில் ஒரு சலூன் கடையில் உள்ளே செல்வதும், பின்னர் 40 நிமிடங்கள் கழித்து கழுத்தில் கையை வைத்துக்கொண்டு வெளியே வருவதும் தெரியவந்தது. அதேபோலவே பிரேத பரிசோதனையில் மருத்துவர்கள் இறந்த நபர் சம்பவத்தன்று முடிதிருத்தம் செய்து இருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தி விஜயராகவன் என்பவரை கைது செய்தனர். அப்போது, பல தகவல்கள் கிடைத்தது. சம்பவத்தன்று அபனி சரணியா கிளாசிக் பியூட்டி பார்லர் சலூன் கடைக்கு சென்று முடிதிருத்தம் செய்து கொண்டார்.பின்பு விஜயராகவன் காசு கேட்கவே தன்னிடம் காசு இல்லை என சைகை காட்டியதாகவும், இதனால் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு ஆத்திரத்தில் விஜயராகவன் கையில் வைத்திருந்த சவர கத்தியால் அபனி சரணியாவின் கழுத்தை அறுத்துவிட்டதாகவும் ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக எந்த ஒரு சிறு துப்பும் இல்லாமல் கிடைக்கவில்லை. சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது அதாவது ரயில் நிலையத்திலிருந்து வரும் நபர் சம்பவ இடத்திற்கு வரும் வரை அவர் தலையில் முடி இருந்ததாகவும், மருத்துவமனையில் சேர்க்கும் போது அவருக்கு முடி இல்லை என்ற சிறு துப்பை வைத்து புலன் விசாரணை செய்த செய்த காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி பாராட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.