வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியை தாக்கி நகைகள் திருட்டு! – போலீசார் தீவிர விசாரணை…

மதுராந்தகம் அருகே வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை மர்ம நபர்கள் இருவர் தாக்கி 25 சவரன் நகை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள வெள்ளபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட புழுதிவாக்கம்…

மதுராந்தகம் அருகே வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை மர்ம நபர்கள்
இருவர் தாக்கி 25 சவரன் நகை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். 

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள வெள்ளபுத்தூர் ஊராட்சிக்கு
உட்பட்ட புழுதிவாக்கம் கிராமத்தில் பார்ம் ஹவுஸ் வீட்டில் 70 வயதான சரோஜினி மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இவரின் மகன் சென்னையில், பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இரவு சுமார் 11 மணியளவில் இரு மர்ம நபர்கள், அவர்கள் வீட்டுக்குள் புகுந்து, வீட்டில் தனியாக இருந்த சரோஜினியை இரும்பு ராடு கொண்டு தாக்கி விட்டு,  அவர் கழுத்தில் மற்றும் கையில் அணிந்து இருந்த தங்க நகை 25 சவரனை
கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதையும் படியுங்கள் : தொடர் கனமழையால் அதிகரிக்கும் பேச்சிப்பாறை அணையின் நீர் வரத்து – அமைச்சர் மனோதங்கராஜ் நேரில் ஆய்வு!

சற்று சுதாரித்துக் கொண்ட சரோஜினி அம்மாள், சென்னையில் உள்ள தனது மகனுக்கு
போன் செய்து உள்ளார். அவர் மகன் அங்கிருந்து மதுராந்தகம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சரோஜினி அம்மாவை சிகிச்சைக்காக
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.