முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா 2ஆம் அலை காரணமாக, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது. பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி அன்று ஐந்து சிங்கங்கள் சரியாக உணவு உட்கொள்ளவில்லை. தொடர்ந்து சிங்கங்கள் இறுமி கொண்டிருப்பதாகவும் சிங்க பராமரிப்பாளர்கள் தகவல் அளித்தனர்.

அதன்படி தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த மருத்துவ குழு, சிங்கங்களை பரிசோதனை செய்தது. உயிரியல் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களிடம் இருந்து சளி, மாதிரிகள் எடுக்கப்பட்டு மத்திய பிரதேசம் போபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் முடிவு வருவதற்கு முன்னரே இதில் ஒன்பது வயது மதிக்கத்தக்க நிலா என்ற பெண்சிங்கம் கடந்த மூன்றாம் தேதி மாலை இறந்து விட்டது.

மேலும் 11 சிங்கங்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டத்தில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வண்டலூர் புங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

அதிமுக ஆட்சியில் கஜானா தூர்வாரப்பட்டுள்ளது: டிடிவி தினகரன்

எல்.ரேணுகாதேவி

கருத்து கணிப்புகள் மக்களை திசை திருப்ப திமுக நிகழ்த்தும் மாயாஜாலம் – டிடிவி தினகரன்

Saravana Kumar

தமிழக சட்டமன்றத்தை அலங்கரித்த சபாநாயகர்கள்!

Vandhana