காதலியை காண மணப்பெண்போல் வேடம் அணிந்த காதலுனுக்கு அடி உதை!

கொரோனா காலத்தில் தனது காதலியை பார்க்க மணப்பெண்போல் உடை அணிந்து வந்த காதலனை பெண்ணின் குடும்பத்தினர் கண்டுபிடித்து அடித்து உதைத்தனர். உத்திரபிரதேசத்தில் உள்ள பதோகி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொரோனா ஊரடங்கை மீறி…

கொரோனா காலத்தில் தனது காதலியை பார்க்க மணப்பெண்போல் உடை அணிந்து வந்த காதலனை பெண்ணின் குடும்பத்தினர் கண்டுபிடித்து அடித்து உதைத்தனர்.

உத்திரபிரதேசத்தில் உள்ள பதோகி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொரோனா ஊரடங்கை மீறி காதலியின் வீட்டுக்கே சென்று காதலியை பார்க்க முயன்றுள்ளார். நேரடியாக சென்றால் காதலியின் குடும்பத்தினர் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால் மணப்பெண்போல் வேடமிட்டு காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளார். என்னதான் வேடமிட்டாலும் அவரின் நடவடிக்கைகள் அவரை காட்டிக்கொடுத்துவிட்டது.

உடனே அவரை சுற்றிவளைத்த குடும்பத்தினர் மணப்பெண்போல் வேடமிட்டவரை துருவித்துருவி விசாரித்தனர். பின்னர் அவரை பிடித்து அடித்து உதைக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.