குற்றம்

குழந்தையை கொலை செய்த தாய் கைது!

ஆந்திராவில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு தடையாக இருந்த குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மரிக்கவலச கிராமத்தைச் சேர்ந்தவர் வரலட்சுமி. இவருக்கு திருமணம் ஆகி மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், வரலட்சுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வர ரெட்டி என்பவருடன் திருமணத்தை தாண்டிய உறவு ஏற்பட்டிருக்கிறது. இதனை அறிந்த வரலட்சுமியின் கணவர் இருவரையும் கண்டித்திருக்கிறார். இருப்பினும், வரலட்சுமி அவர் அந்த உறவை கைவிடாமல் தொடர்ந்ததால், வரலட்சுமிடமிருந்து அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார். அதன்பின், வரலட்சுமி அவரது மூன்று வயது பெண் குழந்தையோடு தனியாக வசித்து வந்தார்.

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, வரலட்சுமி தனது குழந்தை உடல்நலகுறைவால் உயிரிழந்துவிட்டதாக கூறி, அவசர அவசரமாக குழந்தையின் உடலை அவர் அடக்கம் செய்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விசாரணைக்காக வரலட்சுமியை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயற்சித்தனர். அப்போது போலீஸ் வாகனத்தை வழிமறித்து நின்ற பொதுமக்கள், ”காதலுக்காக பெற்ற மகளை படுகொலை செய்த வரலட்சுமியை, உடனடியாக என்கவுண்டர் செய்ய வேண்டும், இல்லையென்றால் எங்களிடம் விட்டு விடுங்கள நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்“ என்று சொல்லி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் அவரை அங்கிருந்து அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பேசிய வரலட்சுமியின் கணவர், மனைவியின் இந்த தவறான பழக்கம் கொரோனா முதல் அலை காலத்திலிருந்து தொடர்ந்து நடைபெறுவதாகவும், இதனை கைவிட சொல்லி பலமுறை கண்டித்தும் கேட்காத நிலையில், தற்போது தான் பெற்ற ஒரே மகளை இழந்துவிட்டதாக வேதனை அடைந்துள்ளதாகவும், மேலும், தனது மனைவிக்கு தூக்குத் தண்டனை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தவறான உறவுக்கு தடையாக இருந்த மகளை தாயே கொலை செய்து புதைத்த சம்பவம், ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Related posts

அலைபாயுதே திரைப்படபாணியில் திருமணம்: இளைஞரை அடித்து உதைத்த பெண் வீட்டார்!

Gayathri Venkatesan

சாலை பணி முறைகேட்டால் தனியார் நிறுவனத்தில் சோதனை: ரூ.20 கோடி மோசடி?

Gayathri Venkatesan

மனைவியை கொல்ல முயன்ற கணவனை கல்லால் அடித்த பொதுமக்கள்!

Gayathri Venkatesan