50 நாளில் 9 சடலங்கள் – அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் அவலம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை சுற்றி கேட்பாரற்று கிடந்ததாக 50 நாளில் 9 சடலங்கள் மீட்பு. தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்கக்கூடியவை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை. இந்த மருத்துவமனை மூன்று…

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை சுற்றி கேட்பாரற்று கிடந்ததாக 50 நாளில் 9
சடலங்கள் மீட்பு.

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்கக்கூடியவை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை. இந்த மருத்துவமனை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது . இந்த மருத்துவமனை வளாகத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட துறைகள் மூலம் அதிநவீன சிகிச்சைகள் என்பது வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தென்  மாவட்டங்களில் இருந்து தினமும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்களுடைய தாய், தந்தை வீட்டில் உள்ள வயதானவர்களை சிகிச்சைக்காக அழைத்து வந்து மருத்துவமனை வாசலில் மற்றும் மருத்துவமனை அருகில் விட்டு செல்லும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது . குறிப்பாக கடந்த 50 தினங்களில் மட்டுமே மருத்துவமனை அருகேவும் மருத்துவமனை வாசலில் கேட்பாரற்று இறந்து நிலையில் எட்டு ஆண் சடலம் மற்றும் ஒரு பெண் சடலம் என மொத்தம் ஒன்பது சடலங்களை மீட்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து இறந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள். மேலும் இறந்தவர்கள் அனைவருமே முறையாக உணவு, சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தது எனவும்  விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.