ஒரே நாளில் 87 ஆயிரம் பேர் ரத்த தானம் – புதிய சாதனை படைத்த இந்தியா

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 87 ஆயிரம் போர் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்துள்ளதால், இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது. பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரே நாளில் 87,000-க்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து…

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 87 ஆயிரம் போர் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்துள்ளதால், இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரே நாளில் 87,000-க்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்து, புதிய உலக சாதனையை  இந்தியா படைத்துள்ளது.’ரக்தன் அம்ரித் மஹோத்சவ்’ திட்டத்தின் கீழ் நாடு தழுவிய மெகா தன்னார்வ ரத்த தான இயக்கத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சப்தர்ஜங் மருத்துவமனையில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் 2014-ம் ஆண்டு 87,059 பேர் ரத்ததானம் செய்த நிலையில் நேற்று ஒரே நாளில் 87,137 பேர் தானாக முன்வந்து ரத்த தானம் செய்துள்ளனர். இதன் மூலம் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ரக்தன் அம்ரித் தனது டிவிட்டர் பக்கத்தில் மஹோத்சவின் கீழ், 87,000-க்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். இது ஒரு புதிய உலக சாதனையாகும் என தெரிவித்துள்ளார்.

இது நாட்டின் விலைமதிப்பற்ற பரிசு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், மொத்தம் 6,136 முகாம்கள் மெகா டிரைவிற்காக பதிவு செய்துள்ளன. அதில், 1.95 லட்சத்திற்கும் அதிகமான ரத்த தானம் செய்பவர்கள் E-Rakt Kosh போர்ட்டலில் தங்களை பதிவும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.