ஜி7 மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி நமது பாராம்பரியத்ததையும், கலை நயத்தையும் எடுத்துரைக்கும் நினைவு பரிசுகளை வழங்கினார்.
ஜி7 கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம் நேற்று ஜெர்மனியில் நடைபெற்றது. இதில் ஜி7 அமைப்பின் உறுப்பினர் நாடுகளான ஜெர்மனி, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் அதிபர்கள் கலந்துகொண்டனர். இதில் இந்தியா, இந்தோனேசியா, செனகல், தென்ஆப்பிரிக்கா, உக்ரைன் போன்ற நாடுகள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர்.
இதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனிக்கு சென்றார். ஜி7 மாநாட்டிற்கு வருகை புரிந்த பிரதமர் மோடியை ஜெர்மன் பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் கைகுலுக்கி வரவேற்றார்.
இந்நிகழ்வின் போது ஜப்பான் பிரதமர், இந்தோனேசியா அதிபர், கனடா பிரதமர் ஆகியோருக்கு பிரதமர் மோடி நினைவு பரிசு வழங்கினார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு உ.பி.யின் நிஜாமாபாத்தில் பிரபலமான கருப்பு மண்பாண்டங் பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
https://twitter.com/ANI/status/1541650960702812161
இது உத்தரபிரதேச மாநிலத்தில் செய்யப்படும் மண்பாண்டங்கள் மிகவும் பிரபலமானவை. ஏனெனில், இவை கருப்பு நிறத்தில் இருப்பதற்காக ஒரு சிறப்பு நுட்பம் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மண்பாண்டங்களில் ஆக்ஸிஜன் வாயு நுழையும் வாய்ப்பு இல்லை என்பதால் இதில் வைக்கும் உணவு பொருள் அதிக நேரத்திற்கு வெப்பமுடையதாக கெடாமல் பாதுகாப்பாக இருக்கும்.
இதேபோல், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவுக்கு உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து அரக்கால் செய்யப்பட்ட ராமர் அரசவையில் இருப்பதை போன்ற சிற்பத்தையும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு காஷ்மீரின் உலக புகழ்பெற்ற கையால் பின்னக்கூடிய பட்டு கம்பளத்தையும் பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுக்கு சத்தீஸ்கரின் பிரபலமான டோக்ரா கலையில் செய்யப்பட்ட ராமாயண சிலையை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
டோக்ரா கலை என்பது இரும்பு அல்லாத உலோக வார்ப்புக் கலையாகும், இது லாஸ்ட்-மெழுகு வார்ப்பு நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்த வகையான உலோக வார்ப்பு இந்தியாவில் 4,000 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படுகிறது. அது தற்போதும் நடைமுறையில் இருந்து வருகிறது.
https://twitter.com/ANI/status/1541658107033427968
உ.பி. வாரணாசியில் இருந்து குலாபி மீனகரி ப்ரூச் மற்றும் கஃப்லிங்க் செட்டை அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு புலந்த்ஷாஹரில் இருந்து கையால் வரையப்பட்ட பிளாட்டினம் வர்ணம் பூசப்பட்ட தேநீர் கோப்பையையும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு லக்னோவில் இருந்து ஜர்தோசி பெட்டியில் வைத்து கலைநய வேலைப்பாடு கொண்ட பாட்டில்களையும், இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகிக்கு ஆக்ராவில் புகழ்பெற்ற மார்பிள் இன்லே டேபிள் டாப் ஓவியத்தையும், ஜெர்மன் அதிபர் ஓலேப் ஸ்கோல்ஸ்க்கு உத்தரபிரதேசத்தின் புகழ்பெற்ற பித்தளை பாத்திரங்களையும், செனகல் அதிபர் மேக்கி சாலுக்கு உ.பி.யின் சீதாபூரில் இருந்து மூஞ்ச் கூடைகள் மற்றும் பருத்தியாலான துணிகளை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.







