இந்தியாவில் ஒரே நாளில் 82,129 பேர் புதிதாக கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 82,129 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை இன்று உச்சத்தை அடைந்திருக்கிறது. 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து…

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 82,129 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை இன்று உச்சத்தை அடைந்திருக்கிறது.

2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா, உலக முழுவதும் பரவியது. உலக முழுவதிலும் தற்போது 13,08,20,485 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 28,50,523 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 1,23,92,260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,64,110 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு நாளில் மட்டும் நாடு முழுவதும் 82,129 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 7,30,54,295 கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இன்று ஒரே நாளில் 47,828 பேர் மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 202 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிராவில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.