டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 4 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டி…

டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 4 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இருந்த 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் பட்டியாலாவில் 24வது தேசிய தடகள கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி நடந்து முடிந்தது. இதில் கலந்துகொண்ட 313 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 26 பேருக்கு பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பெருந்தொற்று பாதித்த 26 பேரில் 5 பேர் வரும் ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இருந்தனர். தொற்று பாதித்த 5 பேரில் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஒருவரும், கேரளத்தைச் சேர்ந்தவர் ஒருவரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் முழு விவரம் இன்னும் சரிவரத் தெரியவில்லை எனவும், பாதிக்கப்பட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.