ட்விட்டருக்கு அபராதம் விதித்த ரஷ்யா!

உலகத்தின் மிகப் பெரிய சமூக ஊடகமான ட்விட்டர் நிறுவனத்திற்கு குழந்தைகளை வன்முறையில் ஈடுப்படுத்தும் பதிவுகளை நீக்காததால் ரஷ்ய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. ரஷ்யாவில் 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் எதிர்கட்சி தலைவர் அலெக்ஸ் நவாலனி…

உலகத்தின் மிகப் பெரிய சமூக ஊடகமான ட்விட்டர் நிறுவனத்திற்கு குழந்தைகளை வன்முறையில் ஈடுப்படுத்தும் பதிவுகளை நீக்காததால் ரஷ்ய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

ரஷ்யாவில் 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் எதிர்கட்சி தலைவர் அலெக்ஸ் நவாலனி கைது செய்யப்பட்டதையடுத்து அங்கு ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இகற்கு காரணம் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட பதிவுகளே என்று ரஷ்ய அதிகாரிகள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் குழந்தைகளுக்கு அழைப்புவிடுக்கும் விதமாக பதிவிடப்பட்ட பதிவுகளை நீக்காததற்கு மாஸ்கோ நீதிமன்றம் ட்விட்டர் நிறுவனத்திற்கு 1,17,000 டாலர்கள் அபராதம் விதித்துள்ளது.

ரஷ்ய அரசு கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து சமூக ஊடகங்கள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. உலகளவில் பலக் கோடி மக்கள் பயன்படுத்தும் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களை ரஷ்யாவில் முழுமையாக முடக்க திட்டமிட்ட நிலையில் அது மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தக் கூடும் என்று அந்த முயற்சி கைவிடப்பட்டது.

கூடிய விரைவில் ரஷ்ய அரசாங்கம் அனைத்து சமூக ஊடகங்களையும் ரஷ்யாவில் முடக்க கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.