தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மேலும் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 775 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பைவிட குறைவு. இதையடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27, 17, 978 ஆக அதிகரித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொற்றுப் பாதிப்பில் இருந்து இன்று 896 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26, 72, 564 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 9,078 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள் ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36, 336 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டங்களை பொறுத்தவரை சென்னையில் 126 பேருக்கும் கோயம்புத்தூரில் 112 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் தொற்றுப் பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.