தமிழ்நாட்டில் புதிதாக 772 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள தாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலை யில், தமிழ்நாட்டில் இன்று 772 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27, 18, 750 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுப் பாதிப்பில் இருந்து இன்று 884 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26, 73, 448 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களில் 8,953 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36, 349 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டங்களை பொறுத்தவரை சென்னையில் 120 பேருக்கும் கோயம்புத்தூரில் 119 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் தொற்றுப் பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
Advertisement: