முக்கியச் செய்திகள் தமிழகம்

“7.5 சதவீத இடஒதுக்கீட்டால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு”

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீட்டினால் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது  என்று திமுக எம்எல்ஏ புகழேந்தி தெரிவித்தார்.

விழுப்புரம் அருகேயுள்ள அத்தியூர் திருக்கை பனைமலை பேட்டையிலுள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய எம்எல்ஏ புகழேந்தி கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழக முதலமைச்சர் மாணவர்கள் பயன்பெற வேண்டுமென்பதால் பள்ளி கல்வித் துறைக்கு 36 ஆயிரம் கோடியும் உயர்கல்வி துறைக்கு 6 ஆயிரம் கோடி  ஒதுக்கியுள்ளார்.

அரசுப் பள்ளிக்கு தமிழக முதலமைச்சர் ஆய்வு சென்றபோது பள்ளி மாணவி காலை உணவு உண்ணாமல் வந்து பள்ளியில் மயங்கிவிழுந்ததால் உடனே ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என உத்தரவிட்டு நடைமுறைபடுத்தினார்.

தமிழக முதலமைச்சரின் உத்தரவால் கிராமப் புற ஏழை எளிய மாணவர்கள் பலனடைந்துள்னர். மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் 3 ஆம் வகுப்பு, 5 வகுப்பு, 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த நடவடிக்கை எடுத்து வருவதால் இத்திட்டத்தினை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது.

தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தனியார் பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் மோகம் தற்போது குறைந்து அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளதால் அதிகளவு மாணவர் சேர்க்கை அரசு பள்ளியில்  நடைபெறுகிறது.

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை வழங்கப்படுவதால் சேர்க்கை அதிகரிக்கிறது என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பள்ளியில் ஆய்வகம், நூலகம் அமைக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, அவர்களின் உங்கள் கோரிக்கைகள் உடனடியாக செய்து தரப்படும் என புகழேந்தி உறுதியளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆப்கன் புதிய பிரதமர்: தலிபான்கள் அறிவிப்பு

G SaravanaKumar

உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 26 முதல் விண்ணப்பிக்கலாம்: பொன்முடி

Gayathri Venkatesan

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி அதிர்ச்சி தோல்வி

Web Editor