சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10,11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
இதனிடையே நேற்று தங்கம் விலை அதிகரித்து, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,150-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், சென்னையில் தங்கம் விலையில் இன்று எவ்வித மாற்றமும் இல்லை.
அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.14,150-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.275க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்றும் விலை மாற்றமின்றி அதே விலைக்கும், ஒரு கிலோ ரூ.2,75,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




