முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 63 வயது முதியவர் கைது!

மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 63 வயது முதியவரை காவல்துறை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

சென்னை, திருவொற்றியூர் சரஸ்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலம். கணவரை இழந்து வாழும் இவர், வேலைக்கு செல்வதால் தனது மூன்று மகள்களையும் வீட்டில் விட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் கமலம் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் 63 வயது முதியவர் புஷ்பராஜ் என்பவர் ஆண்டார்குப்பம் பகுதியில் செக்யூரிட்டி வேலை செய்து வந்துள்ளார். இவர் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் நேரங்களில் மூன்று மாதங்களாக வீட்டில் தனியாக இருக்கும் மூன்று சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

அதனை தாங்கிக் கொள்ள முடியாத சிறுமிகள், வீட்டின் அருகில் உள்ள நபர்களிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் முதியவரின் செயலை பற்றி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த எண்ணூர் அனைத்து மகளிர் காவல்துறையினர், அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் 63 வயது முதியவர் புஷ்பராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement:

Related posts

பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!

Niruban Chakkaaravarthi

உடல்நலக் குறைவால் போராடிய சிறுவனுக்குப் பரிசளித்து மகிழ்வித்த அபுதாபி காவல்துறையினர்

Karthick

திமுக, அதிமுக மற்றும் அமமுக இடையே நடக்கும் யுத்தம்தான் இந்த தேர்தல் – டிடிவி தினகரன்

Gayathri Venkatesan