60 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன

தமிழ்நாடு அரசின் நேரடி கொள்முதல் மூலம் 60 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க, தமிழ்நாடு அரசு நேரடியாக…

தமிழ்நாடு அரசின் நேரடி கொள்முதல் மூலம் 60 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க, தமிழ்நாடு அரசு நேரடியாக கொள்முதல் செய்து வருகிறது.

இந்நிலையில், அரசின் நேரடி கொள்முதல் மூலம் இன்று 60 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. தேனாம்பேட்டையில் உள்ள சேமிப்பு கிடங்கில் தடுப்பூசிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, மாவட்டம் வாரியாக தேவைக்கேற்ப தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்படவுள்ளன.

தமிழ்நட்டிற்கு ஜூன் 2ஆம் தேதி வரை ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இன்று டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். அப்போது தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க அவர் வலியுறுத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.