75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 60 தண்டனை கைதிகள் விடுதலை

75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு  60 தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் கடந்த ஆகஸ்டு மாதம் 15ம்…

75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு  60 தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் கடந்த ஆகஸ்டு மாதம் 15ம் தேதி நிறைவடைந்தது. இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் “ சுதந்திரத்தின் அமிர்த பவள விழா ஆண்டு” என அனுசரிக்கப்பட்டது.

இந்த சுதந்திர தினத்தையொட்டி ”இந்திய சுதந்திரத்தின் அமிர்த பவள விழா” திட்டத்தின் மூலம்   60 தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைகளில் தண்டனை பெற்று வரும்  60 கைதிகள் சுதந்திர தினத்தை அனுசரிக்கும் விதமாக  விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இதன்படி புழல் மத்திய சிறையில் இருந்து 11 தண்டனை கைதிகளும், வேலூர் மத்திய சிறையில் இருந்து 9 பேர், கடலூர் மத்திய சிறையில் இருந்து 12 பேர், திருச்சி மத்திய சிறையிலிருந்து 9 பேர், கோவை மத்திய சிறையிலிருந்து 12 பேர், பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து 4பேர் மற்றும் மதுரை மத்திய சிறையிலிருந்து 1 நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல புழல் மற்றும் கோவை மகளிர் சிறைகளிலிருந்து தலா ஒருவர் விடுதலை செய்யபட்டுள்ளனர்.  மொத்தம் விடுவிக்கப்பட்ட 60 நபர்களில்  தண்டனை காலத்தில் 66 சதவிகிதம் சிறையில் கழித்ததோடு, வேறு எந்த குற்றசெயல்களிலும் ஈடுபடவில்லை எனவும்  விடுவிக்கப்பட்ட 60 கைதிகளுக்கும் தொண்டு நிறுவனங்கள் இனிப்புகள் மற்றும் தேவையான உதவிப்பொருட்களை வழங்கியுள்ளனர் என சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.