விவேக்கின் இறுதிச் சடங்கிற்கு காவல்துறை மரியாதை!

நடிகர் விவேக்கிற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த…

நடிகர் விவேக்கிற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த கலைஞர் விவேக்கிற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில், அதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் விருகம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கின் உடலுக்கு இன்று மாலை மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் காவல்துறை மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.