’எனக்கு சரக்கு பத்தல’ என்று கூறி வேகமாக வந்த லாரியை நிறுத்தி, டயருக்கு அடியில் படுத்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.
போதை பலரை தாறுமாறாக தடம் மாற வைக்கிறது. குடிக்கும்வரை அமைதியாக இருந்தலும் சரக்கு உள்ளே போன பிறகு என்ன செய்கிறோம் என்பது தெரியாமலேயே சிலர் நடந்து கொள்கின்றனர். இந்த சம்பவமும் அப்படித்தான்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி- மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று பகலில் ஒருவர் வந்தார். போதையில் ஆடிக்கொண்டே வந்தவர் நடுரோட்டில் திடீரென்று அமர்ந்தார். பிறகு கைகளை விரித்துக்கொண்டு, ’எனக்கு போதைப் பத்தல’ என்று கத்தினார். சாலையில் அமர்ந்து அவர் கூச்சல் போட்டதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், ‘எனக்கு சரக்கு பத்தல, இன்னும் வேணும்’ என்று கூறி கத்திக்கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த லாரி ஒன்றை நிறுத்திய போதை ஆசாமி, டயருக்குள் படுத்துக் கொண்டு ’என்னை ஏற்றிக் கொல்லு’ என்று கத்தினார். அவர் லாரியில் அடிபட்டுவிட்டார் என்று அங்கிருந்தவர்கள் நினைத்து அக்கம் பக்கத்தினர் பரிதவித்தனர்.
இந்நிலையில், அங்கிருந்து எழுந்த அவர், மீண்டும் சரக்கு பத்தல என்று கத்திக்கொண்டே சென்றார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.









