முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

ஆற்றை வேடிக்கை பார்ப்பதோ, செல்பி எடுப்பதோ கூடாது: சென்னை ஆணையர்

ஆற்றில் வெள்ளம் செல்வதை வேடிக்கை பார்ப்பதோ, செல்பி எடுப்பதோ கூடாது என சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனிடையே சென்னையில் நிரம்பி வழியும் ஆறுகளை வேடிக்கை பார்ப்பதற்காக  பாலங்களிலும், கரைகளிலும் பொதுமக்கள் கூடிய வண்ணம் உள்ளனர். செல்பியும் எடுத்து வருகின்றனர். சிலர் வேடிக்கை பார்க்கும்போது தவறி விழுந்த சம்பவமும் நிகழ்ந்தது.

இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்கள் முடிந்தவரை தங்களது வீட்டினுள் குடும்பத்தினருடன் முக்கியமாக குழந்தைகளுடன் பாதுகாப்பாக இருக்கும்படி கோரப்படுகிறது. தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதோ, கூவம் ஆற்றங்கறைக்கோ, மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகள், மழை நீர் தேங்கியிருக்கும் சுரங்கப்பாதை உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதையோ, குழந்தைகள் சென்று விளையாடுவதையோ, வேடிக்கைபார்ப்பதையோ தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கூவம் ஆற்றின் மீது உள்ள நேப்பியர் பாலத்தின் மீது நின்று செல்பி எடுப்பதோ, அடையாறு ஆற்றில் வெள்ளம் செல்வதை பாலத்தின் மீது நின்று வேடிக்கை பார்ப்பதோ, செல்பி எடுப்பதோ கூடாது என்று குறிப்பிட்டுள்ள ஆணையர், செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரி வெள்ளம் கரைபுரண்டு செல்வதை வேடிக்கை பார்ப்பதோ புகைப்படம் எடுப்பது மற்றும் செல்பி எடுப்பது கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

இறுதிக்கட்டத்தில் வலிமை படப்பிடிப்பு: ஐரோப்பா செல்லும் நடிகர் அஜித்

Ezhilarasan

கொரோனாவுக்கு மாத்திரை: பிரிட்டன் அனுமதி

Halley karthi

கோவிஷீல்டு தடுப்பூசி விலை அதிகரிப்பு!

Jeba Arul Robinson