தாராபுரம் அருகே நல்லதங்காள் அணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி 57-ம் நாள் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த நல்லதங்காள் நீர்த்தேக்க அணைக்கு கட்டுவதற்காக தமிழ்நாடு அரசால் விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்த பின், அங்குள்ள விவசாயிகளுக்கு நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாயும், மானாவாரிய இடத்திற்கு சுமார் ரூ.50,000 வரை வழங்குவதாக கூறி உரிய பணம் வழங்காமல், குறைந்த அளவிலேயே பணம் வழங்கி விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது.
26 ஆண்டுகள் கடந்த பின்பும், இன்று வரை அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை எனக் கோரி, மேலும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாயும், மானாவாரிய இடத்திற்கு சுமார் 75-ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இன்று வரை இழப்பீடு தொகை வழங்காததை கண்டித்து தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகள் 57-ம் நாளாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நல்லதங்காள் அணைக்கு நிலம் வழங்கிய விஜயன் என்பவர் இறந்த பிணம் போலவும், அவருக்கு பெண்கள் ஒப்பாரி இட்டு அழுவது போலவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரூபி.காமராஜ்







