தமிழகத்தில் மேலும் புதிதாக 537 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று மீண்டும் 537 பேருக்கு புதிய கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது…

தமிழகத்தில் இன்று மீண்டும் 537 பேருக்கு புதிய கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 537 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 502 ஆகும். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. வீட்டு கண்காணிப்பு உள்பட சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கையில் 5,472 ஆகும். அதிகபட்சமாக சென்னையில் 105 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.