அதிமுகவில் உள்ள 50 எம்எல்ஏ-க்கள், 2 எம்பி-க்கள் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாராதி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக எம்எல்ஏ-க்கள் 10 பேர் தன்னுடன் பேசி வருவதாக தெரிவித்திருந்தார். இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, அதிமுக-வில் உள்ள அனைவரும் திமுக-வில் இணைந்து பயணிக்க வேண்டும் என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிமுகவில் உள்ள 50 சட்டப்பேரவை உறுப்பினர்கள், 30 மாவட்டச் செயலாளர்கள், 2 எம்பி-க்கள் திமுக-வுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி பட்டியலை வெளியிட்டால், தானும் பட்டியலை வெளியிடுவேன் என்றார். அதிமுகவில் இருந்து பல பேர் திமுகவிற்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதனால்தான் அதிமுகவில் உள்ள அனைவரும் திமுகவில் இணைந்து பயணிக்க வேண்டும் என சொல்வதாகவும், திமுகதான் திராவிட இயக்கம் என்றும் விளக்கமளித்தார். உதயநிதி குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவையே காட்டிக்கொடுக்கிறார். எந்தவித பொறுப்பிலும் இல்லாத சசிகலாவை சட்டமன்றத்தில் உட்கார வைத்தார் ஜெயலலிதா என கூறினார்.
அரசு நிகழ்ச்சிகளிலும் அமர வைத்தார். மேலும் எடப்பாடி பழனிசாமியே சசிகலா காலில் விழுந்தவர்தானே என சாடினார். ராகுல்காந்தியின் காஷ்மீர் – கன்னியாகுமரி வரையிலான நடைபயணம் எல்லா தமிழரும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்ற அவர் இந்த நடைபயணம் பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்