தவறான சிகிச்சை அளித்ததால் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

சென்னை அருகே தவறான சிகிச்சை அளித்ததால் 5 வயது சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகரணை நாராயணபுரம், ராஜேஷ் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர்- லதா தம்பதியினர். இவர்களுக்கு 5 வயதில்…

சென்னை அருகே தவறான சிகிச்சை அளித்ததால் 5 வயது சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகரணை நாராயணபுரம், ராஜேஷ் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர்- லதா தம்பதியினர். இவர்களுக்கு 5 வயதில் நவீன் என்ற மகன் இருக்கிறார். திடீரென்று அவருக்கு காலில் வலி ஏற்பட்டுள்ளது. பின்னர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அழைத்து சென்றுள்ளனர். சிகிச்சை அளித்த சில நிமிடங்களில் சிறுவன் மயக்க நிலைக்கு சென்றுள்ளார்.

பின்னர் மேல் சிகிச்சைகாக வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் கூறி உள்ளனர். அங்கு நடந்த பரிசோதனையில் சிறுவன் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நவீனின் பெற்றோர் போலீசாரிடம் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply