29.4 C
Chennai
September 30, 2023
சினிமா

கேஜிஎப் 2 வெளியீட்டு தேதி எப்போது..?

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கேஜிஎப் 2 படத்தின் வெளியீட்டு தேதி இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் கூட்டணியில் உருவான கேஜிஎப் திரைப்படம் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இதன்வெற்றியை தொடர்ந்து கேஜிஎப் 2ம் பாகம் பெரும் பொருட்செலவில் தயாரானது. ரசிகர்கள் மத்தியிலும் இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், இப்படம் கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால், கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில், படத்தின் வெளியீட்டு தேதி இன்று மாலை 6.32 மணிக்கு அறிவிக்கப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Leave a Reply