முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

உணவின்றி இறந்த சிறுவன்; மரணத்தில் மர்மம்

விழுப்புரத்தில் 5 வயது சிறுவன் உணவின்றி இறந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரிய வந்த வழக்கில்,  சிறுவனின் உடலை இருவர் தூக்கி வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
விழுப்புரம் மேல் தெருவிலுள்ள சாலையோர சலவை கடை ஒன்றில், 5 வயது மதிக்கத்தக்கச் சிறுவனின் சடலம் கடந்த 15ம் தேதி இருப்பதை அறிந்த போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மேற்கொண்ட உடற்கூறு ஆய்வில், இரண்டு தினங்களுக்கு மேலாக உணவின்றி இருந்ததால் சிறுவன் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இரண்டு நபர்கள் சிறுவனை தோளில் சுமந்துவரும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். சிறுவனைத் தூக்கி வரும் இருவர்களும் வடமாநிலத்தவர்கள் போன்று இருப்பதால் குழந்தையைக் கடத்தி வந்து சாலையோரங்களில் பிச்சை எடுக்க வைத்து இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அவர்கள் இருவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் – டிடிவி தினகரன்

Web Editor

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக பணி நியமனம்: மார்க்சிஸ்ட் வரவேற்பு

Gayathri Venkatesan

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுக- சட்டப்பேரவையில் முதலமைச்சர் தீர்மானம்

Jayasheeba