சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக 5 பேருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக சிலரின் பட்டியலை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில், வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றனர். மாவட்ட நீதிபதிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகியோரும் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.
5 நீதிபதிகள் பதவியேற்றதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை 57 ஆக உ5 நீதிபதிகள் பதவியேற்றதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காலியிடங்களின் எண்ணிக்கை 18ஆக குறைந்துள்ளது.
– யாழன்








