‘லக்கி மேன்’ என்ற திரைப்படம் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் ‘யோகிபாபு’ நடிப்பில் உருவாகியுள்ளது.
கதையின் நாயகனாக யோகிபாபு தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வரிசையில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள புதிய படத்திற்கு ‘லக்கி மேன்’ எனத் பெயரிடப்பட்டுள்ளது.
https://twitter.com/iYogiBabu/status/1622575189304446976?s=20&t=lmF36_9iTyOklhLZCrvg-g
‘லக்கி மேன்’ திரைப்படம் உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனை பற்றி பேசுகிறது. அதிர்ஷ்டம் என்றால் என்ன, எந்த அளவிற்கு அது ஒருவனின் வாழ்க்கையில் வந்து சேர்கிறது என்பதையும் படத்தில் காட்டி இருக்கிறார்கள்.
சில சமயங்களில் நாம் விரும்புவது கிடைக்காமல் போவதும் ஒரு அற்புதமான அதிர்ஷ்டம். இப்படத்தில், யோகிபாபு கதாபாத்திரம் உண்மையில் ஒரு ‘லக்கி மேன்’ தானா என்பதைப் பற்றிய படமாக இது இருக்கும் என படக்குழு சார்பில் தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/rameshlaus/status/1622830923191586816?s=20&t=lmF36_9iTyOklhLZCrvg-g
ஃபீல் குட் காமெடி திரைப்படமான இதன் படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.







