காங்கிரஸின் 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் – சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்ற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவை தொடர்ந்து, முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்ற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவை தொடர்ந்து, முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும், அமைச்சர்கள் பரமேஸ்வரா, முனியப்பா, கே.ஜே.கார்கே உள்ளிட்ட எட்டு அமைச்சர்களும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதேபோல், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாயும், டிப்ளமோ முடித்து விட்டு வேலையில்லாமல் இருப்போருக்கு மாதந்தோறும் ஆயிரத்து ஐந்நூறு ரூபாயும் உதவித்தொகையாக வழங்கும் திட்டத்திற்கும், அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி மகளிர் பயணிக்கும் திட்டத்திற்கும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.