ஹிப் ஹாப் தமிழா ஆதியின் நடிப்பில் உருவாகியுள்ள ’வீரன்’ திரைப்படம் ஜூன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.
நடிகரும் இசையமைப்பாளருமான ‘ஹிப்ஹாப் தமிழா’ஆதி நடித்துள்ள படம் ‘வீரன்’. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ‘மரகதநாணயம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே சரவணன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இதற்கு பெருத்த வரவேற்பும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருந்தது. குறிப்பாக சூப்பர் ஹீரோ கெட் அப்பில் செம்ம மாஸாக இருக்கும் ஹிப்ஹாப் ஆதியின் புகைப்படத்துடன் கூடிய அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது.
https://twitter.com/SathyaJyothi/status/1659921988574662656?t=gtnnir3Jg0w3mXzykXtbmw&s=08
தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்ற ’தண்டர்காரன்’ பாடலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ’தி தமிழ் சூப்பர் ஹீரோ ஸ்டோரி’ என்ற கேப்ஷனுடன் வெளியான இந்த ட்ரெய்லர் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. மேலும் வரும் ஜூன் மாதம் 2ம் தேதி திரையரங்குகளில் ’வீரன்’ திரைப்படம் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.







