“மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய மின்சார வாகன உதவி” – அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவிப்பு!

கடலூரில் 100 பேர் பயன்பெறும் வகையில் 2 இல்லங்கள் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபடும். என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் மாற்றுதிறனாளிகள் நலத்துறையில் 9 புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்டார். அப்போது பேசியவர்,

“உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளின் அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் பெட்ரோல் அல்லது மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 10 இல்லங்கள் அமைக்க ரூ.1.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள் அமைக்க ரூ.1.77 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக 2 இல்லங்கள் அமைக்க ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக 6 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள் அமைக்க ரூ.97 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

கடலூரில் 100 பேர் பயன்பெறும் வகையில் 2 இல்லங்கள் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபடும்.

UDID அட்டை மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் துணையாளருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்.

செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு Virtual Reality Learning திட்டம் செயல்படுத்த ரூ.64 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.

பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை உயர்வு. 2026–27ஆம் ஆண்டு முதல் இந்த வாசிப்பாளர் உதவித்தொகை மேலும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.