முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் 48 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – 16 மாவட்ட ஆட்சியர்களையும் மாற்றம் செய்தது தமிழ்நாடு அரசு!!

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களின் ஆட்சியர்களை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உட்பட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். பல்வேறு துறைகளுக்கான செயலாளர்கள் மாற்றப்பட்டனர். அன்றே, விரைவில் அடுத்தக்கட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் குறித்த பட்டியல் வெளியாகும் என நியூஸ்7 தமிழ் தெரிவித்திருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியராக ஆனி மேரி ஸ்வர்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக தீபக் ஜேக்கப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்ஸி ரம்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியராக உமா நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக கலைச்செல்வி மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர், மதுரை மாவட்ட ஆட்சியராக சங்கீதா, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆஷா அஜித், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக விஷ்ணு சந்திரன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக ராகுல்நாத், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக கிறிஸ்துராஜ், ஈரோடு மாவட்ட ஆட்சியராக ராஜா கோபால் சுங்கரா, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக பூங்கொடி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கிஸ், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக சரயு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், பல்வேறு துறைகளைச் சார்ந்த 32 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தொழில்நுட்ப கல்வி இயக்குனராக வினய் நியமிக்கப்பட்டுள்ளார். கணக்கெடுப்பு மற்றும் தீர்வைத்துறை இயக்குனராக மதுசூதனன் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநராக கோவிந்தராவ் நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராக வினீத் நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண் துறை ஆணையராக சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக செந்தில்ராஜ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பதிவுத்துறை ஐஜியாக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கைத்தறித்துறை ஆணையராக விவேகானந்தன், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக அர்ச்சனா பட்நாயக், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சிறப்பு செயலாளராக ரீட்டா ஹரீஷ் தாக்கர், அருங்காட்சியக ஆணையராக சுகந்தி, நிதித்துறை இணைச் செயலாளராக கிருஷ்ணன் உன்னி, மின் ஆளுமை முகமையின் இணை தலைமை நிர்வாகியாக ரமணா சரஸ்வதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வணிக வரித்துறை கூடுதல் ஆணையராக சுப்புலட்சுமி, தமிழ்நாடு தேர்தல் ஆணைய செயலாளர் பாலசுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனராக சண்முக சுந்தரம், அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குநராக ஆர்த்தி, டாஸ்மாக்-கின் புதிய நிர்வாக இயக்குனராக விசாகன், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக சங்கர், CMDA-வின் புதிய சிஇஓ-வாக கவிதா ராமு, எல்காட் MD-ஆக அனீஷ்சேகர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில துறைகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நடிகர் பயில்வானை கைது செய்யக் கோரிக்கை; மனு அளித்த பெண்

G SaravanaKumar

அரசு இல்லத்திலிருந்து மாற விருப்பமில்லை:எடப்பாடி பழனிசாமி!

மாணவர்களின் பேராதரவோடு நிறைவடைந்த நியூஸ்7 தமிழின் கல்விக் கண்காட்சி…….

G SaravanaKumar