கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நபரின் செய்தியை சேகரித்த நியூஸ்7 தமிழ் செய்தியாளருக்கு, மதுபானக்கூட உரிமையாளர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நேற்று விஜய்பிரகாஷ் என்பவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த போராட்டம் தொடர்பான செய்தி நியூஸ் 7 தொலைக்காட்சியில் நேற்று வெளியிடப்பட்டது.
இதையும் படியுங்கள் : ஜூன் 7 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது ’அவதார் – தி வே ஆஃப் வாட்டர்’!!
இந்நிலையில் இந்த செய்தியை சேகரித்த பல்லடம் பகுதி நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவை தொடர்பு கொண்டு, மதுபானக்கூட உரிமையாளர் முருகன் ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். செய்தியாளர் நேசப்பிரபு பல்லடம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் முருகன் மீது இருபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தலைமறைவான மதுபானக்கூட உரிமையாளர் முருகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.







