கூடலூர் அருகே 4 டன் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கக்கனல்லா சோதனை சாவடியில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து 4 டன் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை  வட்டாட்சியர், வனத்துறை,…

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கக்கனல்லா சோதனை சாவடியில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து 4 டன் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை  வட்டாட்சியர், வனத்துறை, மற்றும் காவல் துறையினர் ஆகியோர் பறிமுதல் செய்தனர்.

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்கும்
வகையில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் காகித டம்ளர் மற்றும் தட்டு, பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் என 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த, மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

அதேபோல், கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கக்கனல்லா சோதனை சாவடியில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் சனி, ஞாயிறு தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை புரிந்தனர்.  கூடலூர் வட்டாட்சியர்,
வனத் துறையினர் மற்றும் காவல் துறையினர் அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுற்றுலா பணிகளிடம் இருந்து 4 டன் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளிடம் வனவிலங்குகளுக்கு இடையூறு
ஏற்படுத்தும் வகையில் கண்ணாடி பாட்டில்கள் மற்றும் உணவுப் பொருட்களின்
பிளாஸ்டிக் கழிவுகளை வனப் பகுதிக்குள் வீசக் கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு
வனத் துறையினர் அறிவுறுத்தினர்.

—ம.ஸ்ரீ.மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.