கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 40 லட்சத்தை கடந்துள்ளது.
2019ல் சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா தொற்று இன்று உலகம் முழுவதும் 40 லட்சம் மக்களை கொன்று குவித்துள்ளது. இந்த எண்ணிக்கையை உலக நாடுகள் குறைத்து காட்டுகின்றன என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பின் உச்சியில் அமெரிக்கா உள்ளது. 3,37,46,452 பேர் இதுவரை அமெரிக்காவில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 3,31,40,547 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 6,05,905 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
4,04,211 உயிரிழப்புகளுடன் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு “உலகம் ஆபத்தான காலகட்டத்தில் உள்ளது” என உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. தடுப்பூசி பயன்பாடுகள் காரணமாக கொரோனா உயிரிழப்புகள் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
தற்போது மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,00,269 ஆக அதிகரித்துள்ளது. 180 நாடுகளில் இதுவரை 3,32,57,13,350 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சீனா 1,331,669,000 தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது.