முக்கியச் செய்திகள் இந்தியா

ஒரே நாளில் 817 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

நாடு முழுவதும் 45,892 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 45,892 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 44,291 பேர் குணமடைந்துள்ளனர். 817 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,07,09,557 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,98,43,825 பேர் குணமடைந்துள்ளனர். அதே போல் மொத்த உயிரிழப்பு 4,05,028 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 4,60,704 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது வரை நாடு முழுவதும் 36,48,47,549 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 33,81,671 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதே போல கடந்த 24 மணி நேரத்தில் 18,93,800 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 42,52,25,897 ஆக உயர்ந்துள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

தற்போது 55 நாட்களுக்கு பின்னர் குணமடைந்தவர்களை விட தினசரி தொற்று பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

10 ஆண்டுகளில் 6.85 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது: ஓபிஎஸ்

Saravana Kumar

தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முதல் மாநிலமாகிறது கர்நாடகா

Halley karthi

“சென்னையில் 400 காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்படும்” : சென்னை மாநகராட்சி ஆணையர்

Halley karthi